பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்
பிரான்ஸ் தமிழர் கல்வி நிலையம்
உலகில்தனக்கென ஒரு நாடற்ற தமிழினம். இன்று விரும்பியோ விரும்பாமலோ உலகெங்கும் வாழத்தலைப்பட்டு விட்டது. விடுதலை வேண்டி போராடும் ஓர் இனத்தின் வரலாற்று வழியில் ஏற்படும் விபத்துக்களால் அந்த இனத்தின் அல்லது சமூகத்தின் அபிவிருத்தப் பாதையில் தடங்கல்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத தொன்றாகின்றது. ஆனால் சமூக அக்கறை கொண்டோர், புத்தி ஜிவிகளின் சேவையால் தடங்கல்கள், சுமைகள் தணிக்கப்படுவது இன்றியமையாததாகும்.
தாயகத்திலிருந்து தஞ்சமென வந்த நாம் இங்கு வந்துவுடன் காதிருந்தும் செவிடர்களாகவும், வாயிருந்தும் ஊமைகளாகவும் தத்தளித்தோம். சொந்த மொழி மறந்து அந்நிய மொழியிலேயே சகல துறைகளிலும் செயற்படவேண்டிய ஒரு இக்கட்டான சூழ்நிலை தோன்றியது. இதே போன்று வரும் காலத்தில் இங்கு வாழும் சிறுவர்கள் தாயகம் திரும்பும் சமயத்தில் தமது தேவைகளையோ, உணர்வுகளையோ வெளிப்படுத்த முடியாமலும், தமது உறவினர்களுடன் நன்றாகப் பேசவோ, பழகவோ முடியாமலும் தவிக்கப்போகும் ஓர் அவல நிலை உருவாகும் என்பதைக் கருத்திற் கொண்டு பலரின் பட்டறிவுகளைக் கொண்டு சிலர் முயற்சியில் புலம் பெயர்ந்து பிரெஞ்சு மண்ணில் வாழும் எமது மக்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்வதற்கென உயர்ந்த நோக்கத்துடன் 31.08.1986 இல் எம்மவர்களால் பிரான்சில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது கல்வி நிலையம் பாரிஸ் தமிழர் கல்வி நிலையம என்பதை அறியத்தருகின்றோம்.
பாடசாலை ஆரம்பித்த நாட்களில் காலத்தின் கட்டாயமாக பிரஞ்சுமொழி கற்பிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயற்பட்டது. ஆனால் காலப்போக்கில் தமிழ்மொழி கற்கவேண்டியதன்
எங்கள் குறிக்கோள்
எங்கள் தொலைநோக்கு
எங்கள் மதிப்புகள்